Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பிலிருந்து பயணித்த பார ஊர்தி குடைசாய்ந்து விபத்து!

In இலங்கை
Updated: 04:09 GMT, Apr 25, 2018 | Published: 04:09 GMT, Apr 25, 2018 |
0 Comments
1057
This post was written by : poovannan

புத்தளம்- கொழும்பு பிரதான வீதியின் முந்தல் நகருக்கு அண்மையில் கனரக பார ஊர்தியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து நொச்சியாகம நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பார ஊர்தி,  நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை விபத்திற்குள்ளானதாக  முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது. உடன் ஸ்தலத்திற்கு விரைந்த முந்தல் பொலிஸார் நிலைமையினைச் சீர்செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பொருட்களை ஏற்றிச்சென்ற குறித்த பார ஊர்தியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே இவ்விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg