Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றும் இஸ்ரேலின் திட்டம் கைவிடப்பட்டது!

In உலகம்
Updated: 04:17 GMT, Apr 25, 2018 | Published: 04:17 GMT, Apr 25, 2018 |
0 Comments
1117
This post was written by : Risha

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆபிரிக்க குடியேற்றவாசிகளை பலவந்தமாக வெளியேற்றுவதற்கான திட்டத்தை, இஸ்ரேல் கைவிட்டுள்ளது.

எகிப்தின் சினாய் பாலைவனம் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த ஏராளமான சூடானியர்களையும், எரித்திரியர்களையும் வெளியேற்றுவதற்கு அரசாங்கம் பல மாதங்களாக முயற்சித்து வந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குடியேற்றவாசிகள் தங்களது வதிவினை 60 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது, நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு இலக்குவைக்கப்பட்டவர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூ, ”இஸ்ரேலின் நிபந்தனைகளுக்கு ஏற்ப குடியேற்றவாசிகளை ஏற்க மூன்றாம் தரப்பு நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், குடியேற்றவாசிகளுக்கான தடுப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg