Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோட்டாவின் கடத்தல்கள் குறித்து விசாரிக்க ஒருவருக்கும் முதுகெலும்பில்லை! – மேர்வின்

In இலங்கை
Updated: 08:41 GMT, Apr 25, 2018 | Published: 04:24 GMT, Apr 25, 2018 |
0 Comments
1470
This post was written by : Varshini

”வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே செயற்பட்டுள்ளார். ஆனால் அது குறித்து விசாரிக்க நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட ஒருவருக்கும் முதுகெலும்பில்லை” என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாருடைய உத்தரவும் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆகவே கடத்தல்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் பாதுகாப்பு அமைச்சர் அல்லது பாதுகாப்புச் செயலாளரே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டுமென மேர்வின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைக்கு கோட்டாவே பொறுப்புக்கூற வேண்டுமென மேர்வின் பகிரங்கமாக கூறியுள்ளார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கும் கோட்டாவே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக இடம்பெற்ற கொலைகளுக்கு பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லையென்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சொத்துக்களை தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளார் என்றும் மேர்வின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg