Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலியல் குற்றவாளி ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 07:09 GMT, Apr 25, 2018 | Published: 07:09 GMT, Apr 25, 2018 |
0 Comments
1377
This post was written by : Kemasiya

பாலியல் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட ஆசாராம் பாபு சாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கான தண்டனை விபரங்கள் மாலை எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவருடன் உடந்தையாக செயற்பட்டார்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டவர்களில், 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு மேலும் இருவருக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமியாரின் ஆதரவாளர்கள் கலவரத்தை தோற்றுவிக்கக் கூடும் என்ற அச்சத்தில் சிறைச்சாலை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசாராம் பாபு குற்றவாளி: சிறைக்கு சென்று தீர்ப்பளித்தார் நீதிபதி

கடந்த 2013ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசாராம் பாபு குற்றவாளியென நீதிபதி மதுசூதன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே குறிப்பிட்டதற்கு அமைவாக, இன்று (புதன்கிழமை) ஜோத்பூர் சிறைக்கு நேரில் சென்ற நீதிபதி மேற்குறித்தவாறு தீர்ப்பை வழங்கினார்.

இந்தியாவின் குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆச்சிரமங்களை நடத்திவந்த ஆசாராம் பாபு என்ற சாமியார் மீது, சிறுமிகளை பாலியல் தொந்தரவு கொடுக்கிறார் என்ற பல குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் 2013ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்தில் ஹாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமியொருவரை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டில், ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.

இவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பில் இவருடன் இருந்த கூட்டாளிகள் இருவருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாமியாருக்கு சாதகமாகவே தீர்ப்பு வருமென எண்ணி, ஆசாராம் பாபுவை வரவேற்பதற்கு அவரின் தொண்டர்கள் சிறை வாசலில் மாலையுடன் காத்திருந்தனர்.

எனினும் தீர்ப்பு எதிராக அமைந்துள்ளதோடு, மாலையுடன் நின்றவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg