Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் உயிர்பெறும் 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இராட்சத யானை இனம்!

In உலகம்
Updated: 08:02 GMT, Apr 25, 2018 | Published: 07:57 GMT, Apr 25, 2018 |
0 Comments
1682
This post was written by : Risha

நான்காயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த யானையின் மூதாதையர் என்று அழைக்கப்படும் ‘மமூத்’ இன உயிரினங்கள் மீண்டும் பூமியில் தோன்றவுள்ளன.

அழிந்து போன இந்த உயிரினங்களின் புதைபடிமங்களிலிருந்து மரபணுக்களைப் பிரித்தெடுத்து அதன் மூலமாக ‘மமூத்’களை மீள உருவாக்கம் செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் அதிகமாக வாழ்ந்த இந்த உயிரினங்களானது, பனியுகத்துக்குப் பின்னரான காலநிலை மாற்றத்தின் காரணமாக அழிந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும், இவற்றின் அழிவுக்கு வேட்டை, இயற்கைச் சூழல், உணவுப் பற்றாக்குறை போன்ற பிற காரணங்களும் கூறப்படுகின்றன.

இந்த மாமூத் உயிரினங்களின் புதைப்படிமங்கள் உறைந்த பனிப் பகுதியில் இருந்து அடிக்கடி கண்டெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, அவற்றின் மரபணுக்களை பயன்படுத்தி மமூத்களை மீள உருவாக்க விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இருந்த தொழில்நுட்பங்களால் மாமூத்களை மீள உருவாக்குவது என்பது சாத்தியப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மேம்பட்ட குளோனிங் முறையில் அதற்கான வாய்ப்பு கைகூடியுள்ளது.

அதன்படி, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஜோர்ஜ் சேர்ச் குளோனிங் முறையில் ‘கம்பளி யானை’ எனப்படும் மாமூத்களின் ஒரு வகையை மீண்டும் உருவாக்குவதற்கான ஆய்வைத் தொடங்கியிருக்கிறார். ஜோர்ஜ் சேர்ச் மரபணுக்கள் சார்ந்த துறையில் முன்னோடி விஞ்ஞானி என்பதால் இந்த ஆய்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அழிந்துபோன உயிரினங்கள் திரும்ப உருவாக்கப்படினும், அவை இன்றைக்கு பூமி இருக்கும் சூழலில் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமே. ஆனால், இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெற்றுவிட்டால் அந்த உயிரினத்தை வளர்ப்பதற்காக ரஷ்யாவின் விஞ்ஞானிகள் ஒரு இடத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

சைபீரியாவுக்கு சற்று தொலைவில் சுமார் இருபதாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பிளஸ்டோசென் என்ற பூங்காவை பல விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் பூங்காவில் பனியுகம் நடைபெற்ற போது இருந்த சுற்றுச்சூழலை மறு உருவாக்கம் செய்யும் முயற்சியிலும் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg