Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் களைகட்டும் வெசாக் தின நிகழ்வுகள்

In இலங்கை
Updated: 09:06 GMT, Apr 25, 2018 | Published: 09:04 GMT, Apr 25, 2018 |
0 Comments
1076
This post was written by : poovannan

மட்டக்களப்பு மங்களகம ஸ்ரீ தர்மராமய விகாரையில், விகாராதிபதி வண. பி.சந்தரத்தன ஹிமியின் ஆசிகளுடனும் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் தலைமையிலும் எதிர்வரும் 29ஆம் திகதி வெசாக் வைபவம் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வைபவங்கள், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரினால் பிற்பகல் 6 மணிக்கு ஒளியூட்டி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக இவ்வைபவத்தின் சகல ஒழுங்குகளையும் செய்கின்ற செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெத்தினம் தெரிவித்தார்.

இவ்வைபவம் குறித்து உதவிப் பிரதேச செயலாளர் மு.ரஞ்சினி கூறுகையில், “வெசாக் தினத்தில் பிரித்பாராயண நிகழ்வுகளான, சீலம் அனுஸ்டித்தல், பௌத்த சமய போதனை, பௌத்த சாசன பூசை, தீப ஒளிப் பூசை, தலைமைப்பீடம் வேலைகளை ஆரம்பித்தல், அரசாங்க அதிபரின் உரை மற்றும் பக்திப்பாடல் நிகழ்ச்சி ஆகியன இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, இடம்பெறவிருக்கும் வெசாக் கண்காட்சிப் பந்தல்கள் மற்றும் கண்காட்சிப் பந்தல்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் அனைவரும் பங்குகொள்ள முடியும்.

இதன்போது, வெசாக் பந்தல் அலங்காரங்களுக்கான பெறுமதி மிக்க பரிசில்களை வழங்க, நடுவர் குழுவினரால் புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg