Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி விவகாரம்: சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்

In இந்தியா
Updated: 08:59 GMT, Apr 25, 2018 | Published: 08:56 GMT, Apr 25, 2018 |
0 Comments
1085
This post was written by : Kemasiya

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் கருப்பு சட்டையணிந்து உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சென்னை சேம்பாக்கத்தில் உள்ள கட்சியின் விருந்தினர் மாளிகையில், இன்று (புதன்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் இடம்பெறும் இப்போராட்டத்தை, காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் ஆரம்பித்து வைத்தார்.

காலை 8மணியளவில் ஆரம்பமாகிய இப்போராட்டம் இன்று மாலைவரை இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரும்  கருப்பு சட்டையணிந்து, அமைதியான முறையில் காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg