Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிர்மலாதேவி விவகாரத்தில் எழும் சர்ச்சை: மேலும் இரு மாணவிகள் முறைப்பாடு

In இந்தியா
Updated: 10:47 GMT, Apr 25, 2018 | Published: 09:31 GMT, Apr 25, 2018 |
0 Comments
1136
This post was written by : Kemasiya

மாணவர்களை தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, தமிழக பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் நிர்மலாதேவி மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) சி.பி.சி.ஐ.டி. விசாரணை பொலிஸ் அதிகாரிகளிடம் மேலும் இரு மாணவிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

குறித்த மாணவியர் தமது சட்டத்தரணியூடாக நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு மனுவை பொலிஸ் அதிகாரிகளிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை இவ்விவகாரத்தில், நிர்மலாதேவிக்கு உடந்தையாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, உதவிப் பேராசிரியர் முருகன் அளித்த வாக்குமூலத்தின் பிரகாரம், மேலும் சில பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு  தொடர்பிருப்பதாக சி.பி. சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் முருகன் என்பவரை 10நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சி.பி.ஐ.யின் ஐந்து நாள் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் நிர்மலாதேவிக்கான காலம் இன்றுடன் முடிவடைகிற நிலையில், அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதிகோரவுள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி பொலிஸார் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg