Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலை மூட்டைகள் மீட்பு!

In இந்தியா
Updated: 09:21 GMT, Apr 25, 2018 | Published: 09:21 GMT, Apr 25, 2018 |
0 Comments
1055
This post was written by : Ravivarman

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக பீடி இலைகள் மூட்டைகளாகக் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த பீடி மூட்டைகளை இன்று (புதன்கிழமை) காலை சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியான பாம்பன் குந்துகால் கடல்பகுதியல் இன்று அதிகாலை மூட்டைகளாக நடுக்கடலிலும் கடற்கரை ஓரத்திலும் பெறுமதியான உயர் தரம் வாய்ந்த பீடி இலை கரை ஒதுங்கியுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்கத்துறையினர் மீனவர்களின் உதவியுடன் கரை ஒதுங்கிய பெறுமதி வாய்ந்த சுமார் 25 மூட்டை உயர் ரக பீடி இலைகளை மீட்டுள்ளனர்.

மேலும் நடுக்கடலில் மிதந்து வரும் மூட்டைகளை பொலிஸார் மீனவர்களின் உதவியுடன் மீட்கும் முயற்சியல் ஈடுபட்டனர்.

மேலும் இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது நடுக்கடலில் படகு மூழ்கியதால் மூட்டைகள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் அல்லது கடற்படையினரோ அல்லது கடலோரகாவல் படையினரோ ரோந்துப்பணியின் குறித்த படகினை வழிமறித்திருக்கலாம் என பாம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg