Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மே தினம் குறித்த ஏற்பாடுகள் ஆரம்பம்: ஹிஸ்புல்லாஹ்

In இலங்கை
Updated: 10:03 GMT, Apr 25, 2018 | Published: 09:58 GMT, Apr 25, 2018 |
0 Comments
1051
This post was written by : poovannan

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பெருந்தொகையான மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இம்முறை வெசாக் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதி மே தினக் கொண்டாட்டம் நடத்தப்படவுள்ளமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) கருத்துக் கூறுகையில் இவ்விபரங்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் இடம்பெறவிருக்கும் இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளேன்.

இக்கூட்டத்திற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவொன்று எனது தலைமையிலே ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்தமைக்கு அமைவாக, சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் கூட்டத்தில் பங்குபற்ற வரும் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்களை அழைத்து வருவதற்காக சுமார் 1500 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் பெருந்தேசியக் கட்சியொன்று, தமிழ் பேசும் மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் தனது மே தினக் கூட்டத்தை ஜனாதிபதி தலைமையில் நடாத்துவது இதுவே முதல் தடவையாகும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg