Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அர்ஜுன் மற்றும் கசுனின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிப்பு

In இலங்கை
Updated: 06:23 GMT, Apr 26, 2018 | Published: 06:19 GMT, Apr 26, 2018 |
0 Comments
1066
This post was written by : Risha

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த இருவர் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி விற்பனையின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பித்தது.

இதனடிப்படையில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg