Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொங்கோலிய ஜனாதிபதியை சந்தித்தார் சுஸ்மா சுவராஜ்

In இந்தியா
Updated: 08:07 GMT, Apr 26, 2018 | Published: 07:43 GMT, Apr 26, 2018 |
0 Comments
1048
This post was written by : Kemasiya

மொங்கோலியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீனாவிற்கான விஜயத்தை தொடர்ந்து நேற்று மொங்கோலியா சென்ற சுஸ்மா, இன்று (வியாழக்கிழமை) அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அத்துடன் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில், இரு நாடுகளும் ஒத்துழைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இதேவேளை நேற்று மொங்கோலியா சென்றடைந்த சுஸ்மாவிற்கு அந்நாட்டு முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg