Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போதையற்ற பிரதேசமாக வவுனியாவை மாற்றவேண்டும்: நகரசபைத் தலைவர்

In இலங்கை
Updated: 08:00 GMT, Apr 26, 2018 | Published: 07:24 GMT, Apr 26, 2018 |
0 Comments
1043
This post was written by : Yuganthini

வவுனியா நகரத்தை போதை மற்றும் புகையிலை பொருட்கள் அற்ற பிரதேசமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.

வவுனியா ஓவியா விருந்தினர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கூறுகையில்,

“வவுனியா நகரப் பகுதியில் பொழுதுபோக்கு இடங்கள் இல்லாமையினால் இளைஞர்கள் புகையிலை பொருட்களின் பாவனை மற்றும் மது பாவனைக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் வவுனியா நகரத்தினை முன்மாதிரியான நகரமாக மாற்றவும் அனைவரும் ஒன்றிணைந்து புகையிலை பாவனையை ஒழிக்கும் செயற்றிட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

சட்ட ரீதியாக அதனை தடுப்பது கடினமான விடயம். ஆகையால் நகரின் அபிவிருத்தி, இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இவ்வாறான பொருட்களை விற்பனை செய்பவர்கள் அதனை குறைத்துக்கொள்ளவோ நிறுத்தவோ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது” எனவும் அவர்  தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg