Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவின் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு ஈரான் உதவத் தயார்

In உலகம்
Updated: 07:31 GMT, Apr 26, 2018 | Published: 07:31 GMT, Apr 26, 2018 |
0 Comments
1100
This post was written by : Suganthini

மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு உதவியளிக்கத் தாம் தயாராகவுள்ளதாக, ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரஸ்ஸல்ஸில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மாநாட்டில் சிரிய விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடியபோதே ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஸரீஃப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அந்நாட்டில் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுவது மிக முக்கியமானதொன்றாகும். ஆகையினால், அந்நாட்டில் அவசியமாக  போர்நிறுத்தம் கடைக்கப்பிடிக்கப்பட வேண்டும்’ எனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு ஏனைய நாடுகளுடன் இணைந்து உதவ நாம் முன்வந்துள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கான நிவாரணஉதவி உட்பட அவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைமீது கரிசனை செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர், மோதலுக்கு சமாதானத்தீர்வை அடைவதே  மிகமுக்கியமானதெனவும், கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg