Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோயாளர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும்: வடமாகாண சுகாதார அமைச்சர்

In இலங்கை
Updated: 08:46 GMT, Apr 26, 2018 | Published: 08:46 GMT, Apr 26, 2018 |
0 Comments
1054
This post was written by : Varatharajan Yuganthini

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கதிர்படம் எடுக்கும் இயந்திரம் கொள்வனவு செய்யப்படவுள்ளமையால் நோயாளர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்படுமென, வடமாகாண சுகாதார அமைச்சர் ஞ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக கதிர்படம் எடுக்கும் இயந்திரம் பழுதடைந்தமையால் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனரெனவும் அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பாரிய எலும்பு முறிவுக்கு உட்பட்ட நோயாளர்கள் வவுனியா யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பியே கதிர்படம் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் நோயாளர்களின் நலன்கருதி 6.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் இரண்டு வாரங்களில் கொள்வனவு செய்யப்பட்டு  இயந்திரத்தினை பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து நோயாளர்களின் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்படும்” என அவர் தெரிவித்தார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg