Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியர்கள் வேலைநிறுத்தம்: மட்டு-போதனா வைத்தியசாலையிலும் பணிகள் ஸ்தம்பிதம்!

In இலங்கை
Updated: 09:16 GMT, Apr 26, 2018 | Published: 09:16 GMT, Apr 26, 2018 |
0 Comments
1044
This post was written by : Ravivarman

கிழக்கு மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வைத்தியசாலைகளின் நடவடிக்கைககள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேலதிக நேரக்கொடுப்பனவு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வைத்தியதிகாரிகள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கிலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் நோயாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு செயற்படாமையினால் நோயாளர்கள் திரும்பிச் சென்றதுடன், வாராந்த பாரிசோதனைகளுக்கு வந்தோரும் ஏமாற்றத்துடன் திரும்பியதை அவதானிக்க முடிந்ததாகவும், மருந்து வழங்கும் பகுதி கதிரியக்க பிரிவுகள் உட்பட பல பகுதிகளும் செயற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், அவசர சிகிச்சைப்பிரிவு வழமை போன்று செயற்பட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ஐ.எம்.இப்றாலெப்பை எமது செய்தியாளரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg