Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹற்றனை மரபுரிமை நகரமாக மாற்றியமைக்க நடவடிக்கை: நகர சபைத் தலைவர்!

In இலங்கை
Updated: 09:38 GMT, Apr 26, 2018 | Published: 09:38 GMT, Apr 26, 2018 |
0 Comments
1041
This post was written by : Ravivarman

ஹற்றன் நகரை மரபுரிமை நகரமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஹற்றன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஹற்றன் – டிக்கோயா நகர சபையின் முதலாவது சபை அமர்வு இன்று (வியாழக்கிழமை) நகரசபைத் தலைவர் சடையன் பாலசந்திரன் தலைமையில் கூடியது.

இதில் புதிதாக சபைக்காக தெரிவு செய்யப்பட்ட தலைவர் உட்பட 16 உறுப்பினர்கள் இந்த முதல் சபை அமர்வில் கலந்து கொண்டனர். இதன்போது ஹற்றன் நகர சபையின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற அபுசாலி அவர்களுக்கு சபையினரால் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின் ஹற்றன் நகரசபை ஊடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த நகரசபைத் தலைவர், ஹற்றன் நகரத்தில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், ஹற்றன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுகள் தவிர்ந்த ஏனைய அரசியல் நடவடிக்கைகளுக்கு இம் மைதானத்தை பாவிப்பதற்கான அனுமதியை மறுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஹற்றன் நகரில் பாரிய பிரச்சினையாக இருக்கும் குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இடம் ஒன்றைத் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg