Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு

In இலங்கை
Updated: 16:51 GMT, Apr 26, 2018 | Published: 16:51 GMT, Apr 26, 2018 |
0 Comments
1051
This post was written by : Ravivarman

முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான நேர்முகத்தேர்வு இன்றும் (26) நாளையும் (27) இடம்பெறவுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் 319 பட்டதாரிகள் இந்த நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனடிப்படையில் நேற்று 105 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்ததோடு இன்றும் 105 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஏனையவர்களுக்கு நாளை நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போதும் வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடனேயே குறித்த நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டுள்ளதாக பட்டதாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg