Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலித்களுக்கு எதிராகவே பா.ஜ.க. செயல்படுகிறது: மாயாவதி குற்றச்சாட்டு!

In இந்தியா
Updated: 04:00 GMT, Apr 27, 2018 | Published: 04:00 GMT, Apr 27, 2018 |
0 Comments
1062
This post was written by : Ravivarman

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதுடன், மோடி தலைமையிலான ஆட்சியில் இந்துத்துவ அமைப்புகள் புத்துயிர் பெற்றுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

சித்ரதுர்காவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘உத்தரபிரதேசம், பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்துத்துவ அமைப்பினர் 10-க்கும் மேற்பட்ட தலித் மக்களைக் கொலை செய்திருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருக்கிறார். தற்போது மத்திய பா.ஜ.க. அரசு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்துள்ளது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏழை எளிய மக்களும், விவசாயிகளும், சிறு தொழில் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்கள் மோடி அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் இன்னும் நிலைமை மோசமாகி விடும்.

எனவே தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ், பா.ஜ.க. தவிர்த்து ம.ஜ.த. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg