Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர்கள்: உலக வங்கி ஒப்புதல்

In இலங்கை
Updated: 07:57 GMT, Apr 27, 2018 | Published: 07:00 GMT, Apr 27, 2018 |
0 Comments
1123
This post was written by : Risha

கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் நவீனமயப்படுத்தும் இலங்கையின் முயற்சிக்கு ஆதரவளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது.

அதன்படி, குறித்த செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு உலக வங்கி நேற்று (வியாழக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

General Education Modernization Project (GEM) என்ற பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டத்தின் கீழ், இலங்கைச் சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களுடன் இணைந்ததாக பொதுக்கல்வியின் பாடவிதானங்கள் நவீனமயப்படுத்தப்படவுள்ளது.

இதில், பல்வகைப்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாக பார்க்கப்படும் ஆங்கிலம் மற்றும் கணிதம் போன்ற மூலோபாய பாடங்களுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இத்திட்டத்தினூடாக, க.பொ.த உயர்தரத்தில் தெரிவுகள் விரிவாக்கப்படுவதுடன், அந்தவகையில் மாணவர்கள் கலை, முகாமைத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளில் இருந்து தமக்குப் பொருத்தமான பாடங்களை தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருப்பர்.

மேலும், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான பாடவிதானங்கள் டிஜிட்டல் முறையில் கணனிகளுடாக பயன்படுத்தக்கூடியதாக விருத்திசெய்யப்படும். அதிகமாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்கள் குறித்தே இத்திட்டத்தில் கவனம் குவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg