Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுக்கமான குடிவரவு விதிகளால் மருத்துவத்துறைக்குப் பாதிப்பு

In
Updated: 09:02 GMT, Apr 27, 2018 | Published: 08:55 GMT, Apr 27, 2018 |
0 Comments
1145
This post was written by : S.K.Guna

தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) மருத்துவர்களை நியமனம் செய்வதற்கு குடிவரவு விதிகள் பாதகமாக உள்ளதாக சுகாதாரத்துறைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வீசா மறுக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் இந்தவிடயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.

ஆனால் அதிகளவில் மருத்துவர்களுக்கான வீசா அனுமதி மறுக்கப்படுவதாகவும் இதனால் நோயாளிகள் சிகிச்சைக்காக பலமணிநேரம் காத்திருக்கின்றார்கள் என்று தேசிய சுகாதார சேவை பிரிவினர் கூறுகின்றனர்.

மேலும் ஏற்கனவே 100 இந்திய மருத்துவர்களுக்கான வீசா மறுக்கப்பட்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் சுகாதார சேவையின் அவசரத்தேவை குறித்து கவனம்செலுத்தவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ஜெரெமி ஹன்ட் மற்றும் உள்துறை செயலாளர் அம்பர் ருட் ஆகியோரிடம் தேசிய சுகாதாரசேவைப்பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg