Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரோஹரா கோஷம் விண் பிளக்க… கலிகாலத் துயர் துடைக்க தேரேறி வந்தார் அரசடி அம்மன்!

In
Updated: 09:57 GMT, Apr 28, 2018 | Published: 09:55 GMT, Apr 28, 2018 |
0 Comments
1191
This post was written by : Puvanes

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா பெருந்திரளாக பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பான இடம்பெற்றுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை 07 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து உள்வீதியுலா வந்த அம்மன் காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து கடந்த 14 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, இன்று பக்தர்கள் படையோடு பவனி வந்தார் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன்.

ஏராளமான பக்தர்கள் அம்மன் அருள் வேண்டி பக்திப்பெருக்குடன் எழுப்பிய அரோஹரா கோசங்களை விண் பிளக்க, ஆயிரம் கண்கொண்டு அருள்பாலிக்க தேரேறி வந்த அம்மனின் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg