Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதவிகளில் அதிகாரம் மட்டும் கூடுவதால் பயனில்லை: சஜித்

In இலங்கை
Updated: 05:08 GMT, May 1, 2018 | Published: 02:40 GMT, May 1, 2018 |
0 Comments
1195
This post was written by : Ravivarman

பதவிகளில் அதிகாரம் மட்டும் கூடுவதால் எந்தப் பயனுமில்லை என வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் வீடமைப்புத் திட்டத்தினை மக்களிடம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படவேண்டும். வெறுமனே பதவிகளுக்கு அதிகாரத்தைக் கூட்டுவதனால் எந்த நன்மையும் கிடையாது.

மக்களினால் வழங்கப்படும் ஆணையினைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இதன்போதே மக்களது எதிர்பார்ப்புக்களிற்கு ஏற்ப எம்மால் சேவை செய்ய முடியும்.

இதனைக் கருத்திற் கொண்டே பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் பதவிகளைத் துஸ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது. பதவியின் அதிகாரம் என்பதைவிட மக்களின் திருப்தியே எமக்கு முக்கியமானதாக அமையவேண்டும். இதன் மூலம் சிறந்த ஆட்சியினை மக்களுக்கு வழங்க முடியும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg