Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுயநம்பிக்கை- படைப்பாற்றலை கொண்டாடும் ஆபிரிக்க தீ திருவிழா நிறைவு

In
Updated: 11:06 GMT, May 1, 2018 | Published: 11:06 GMT, May 1, 2018 |
0 Comments
1049
This post was written by : Risha

தென் ஆப்பிரிக்காவில் வடமேற்கு கேப் மாகாணத்தில் உள்ள Tankwa Karoo தேசிய பூங்காவில், நடைபெற்றுவந்த வருடாந்த ஆபிரிக்க தீ திருவிழா நிறைவுக்கு வந்துள்ளது.

ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தல், சுயநம்பிக்கை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை கொண்டாடும் ஒரு வார திருவிழாவாக வருடாந்தம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓவியர்கள், இசை கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள கலைஞர்களதும் திறமையை வெளிகாட்டுவதற்கான ஒரு தளமாக இத்திருவிழா அமைந்துள்ளது.

இம்முறை திருவிழாவில் தெர்மகோல், காகிதங்கள் மற்றும் அட்டைகளினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வடிவங்களிலான ஆடைகளை அணிந்தவாறு சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, பல விதமான உணவு மற்றும் குடிபான வகைகளும் நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தவர்களுக்கு பகிரப்பட்ட நிலையில், அது பலருக்கும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கியிருந்தது.

பரிஸிலிருந்து குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த டெல்ஃபைன் மற்றும் வின்சென்ட் ஆகியோர், தங்களது உடைகளை தயாரித்துக் கொள்வதற்கு மூன்று மாதங்களை செலவிட்டிருந்ததாக தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்கு கையில் பணம் இன்றி எவ்வித பிரச்சினைகள் குறித்தும் சிந்திக்காது தாமாக வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. இத்திருவிழாவில் எதனையும் விற்பனை செய்வதற்கோ, கொள்வனவு செய்வதற்கோ இல்லை. அனைத்தும் பரிசாக வழங்கப்படுவதுடன், கிருபையால் பெறப்படுகிறது.

பெரியவர்களுக்கு போன்றே சிறுவர்களுக்கான ஒரு விளையாட்டு அரங்கமாகவும் இது அமைந்துள்ளது. ஒரு வாரமாக நீடிக்கும் இந்த நிகழ்விற்காக வடிவமைக்கப்பட்ட உருவச்சின்னங்கள் நிகழ்வின் இறுதி நாளில் எரித்து சாம்பலாக்கப்பட்டு, திருவிழாவின் தடயங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg