Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குயின்ஸ்பரியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு மற்றோருவர் படுகாயம்

In
Updated: 09:02 GMT, May 2, 2018 | Published: 08:43 GMT, May 2, 2018 |
0 Comments
1203
This post was written by : S.K.Guna

வடமேற்கு லண்டன், குயின்ஸ்பரி பகுதியில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 30 வயது மதிக்கத்தக்க நபரொருவர் உயிரிழந்துள்ளார். 20 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் 9 நேற்றிரவு மணியளவில் குயின்ஸ்பரி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கம்பலான்ட் (Cumberland) வீதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன் சம்பவத்தினை யாராவது நேரில் கண்டிருந்தால் அதுகுறித்து தகவல்களை வழங்குமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டில் லண்டன் மற்றும் புறநகரப்பகுதிகளில் இதுவரையில் இவ்வாறான துப்பாக்கிச்சூடு காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

நன்றி theguardian

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg