Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனித அடைக்கல அன்னை ஆலய அபிஷேக விழா

In ஆன்மீகம்
Updated: 05:32 GMT, May 3, 2018 | Published: 05:32 GMT, May 3, 2018 |
0 Comments
1077
This post was written by : Yuganthini

மன்னார், விடத்தல் தீவு புனித அடைக்கல அன்னை ஆலய அபிஷேக விழாவும், புதிய ஆயரை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

விடத்தல் தீவு பங்குத்தந்தை தலைமையில் குறித்த நிகழ்வுகள் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றன.

இதன்போது மன்னார் மறை மாவட்டத்தின் புதிய பேரருட் கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை வரவேற்கப்பட்டார். மறைமாவட்ட ஆயர், மோட்டார் சைக்கிள் பவனியாக விடத்தல் தீவு பங்கில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட ‘பங்கின் பாதுகாவலியாம் புனித அடைக்கல அன்னை ஆலயம்’ நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆயரினால் குறித்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டு அபிஷேகம் இடம்பெற்று திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம், பிரதேசச் செயலாளர்கள், அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg