Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் ‘என்னை அறிந்தால்-2’ – கௌதம் மேனன் தகவல்

In சினிமா
Updated: 08:48 GMT, May 3, 2018 | Published: 07:42 GMT, May 3, 2018 |
0 Comments
1064
This post was written by : Jeyachandran Vithushan

தமிழில் முன்னணி இயக்குனர்களில் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். இவரின் தயாரிப்பில் மின்னலே படம் முதல் காற்று வெளியிடை படம் வரை வெளியான படங்களை மறக்க முடியாது.

அவரது படத்தில் காதல், அதிரடி, அக்க்ஷன் போன்ற பல்வேறு காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருக்கும். இதுவே ரசிகர்களின் மனதை கவர காரணமாக அமைந்தது.

தற்போது அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ 2ஆம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் பல செவ்விகளில் தெரிவித்து வருகின்றார்.

அதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்றுவரும் நிலையில், கதை முழுவடிவம் பெற்றதும் அஜித்தை அணுக வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போது அதற்கான பணிகள் 30 சதவீதமே முடிவடைந்துள்ளதாக தெரிவித்த அவர், “அஜித்திடம் கதை முழு வடிவம் பெற்றதும் அணுகுவதாக தெரிவித்துள்ளேன். இருப்பினும் அவர் நீண்ட காலம் காத்திருக்கின்றார். அவர் என்னை கேட்டுக்கொண்டே இருந்தார். நான்தான் கதையை இன்னும் தயார் செய்யவில்லை. இது என்னுடைய தவறுதான்” என கூறியுள்ளார்.

தற்பொழுது விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’, தனுஷூடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘செக்கச் செவந்த வானம்’ போன்ற படங்களை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg