Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கும் திட்டம் ஒத்திவைப்பு

In ஐரோப்பா
Updated: 09:05 GMT, May 4, 2018 | Published: 09:05 GMT, May 4, 2018 |
0 Comments
1055
This post was written by : Suganthini

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கும் திட்டத்தை இந்த வருடம் ஒத்திவைத்துள்ளதாக, வருடந்தோறும் நோபல் பரிசு வழங்கிவந்த சுவீடன் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் காணப்படும் நிலையில், நோபல் பரிசு வழங்கும் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சிலர் ராஜினாமாச் செய்துள்ளனர்.

இது தொடர்பாகக் குழப்பம் காணப்படும் நிலையில், இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாகவும், அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த வருடத்துக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கும் நடவடிக்கையானது, அடுத்தாண்டில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்வுடன் சேர்த்து வழங்கப்படுமெனவும், அந்நிறுவனம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg