Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கவனயீர்ப்புப் போராட்டத்தில் தொண்டர் ஆசிரியர்கள்

In இலங்கை
Updated: 10:28 GMT, May 4, 2018 | Published: 10:28 GMT, May 4, 2018 |
0 Comments
1087
This post was written by : poovannan

நிரந்தர நியமனம் பெற்றுத் தருமாறு கோரி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அனர்த்தங்கள் நிலவிய காலப்பகுதியில் எதுவித வேதனமும் இன்றிக் கடமையாற்றியதுடன், ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய அரசாங்கப் பாடசாலைகளில் சுமார் 15 முதல் 20 வருடங்கள் கடமையாற்றியமைக்கு இதுவரை காலமும் நிரந்த நியமனம் வழங்கப்படவில்லை.

ஆசிரியர்கள் தமக்கான நிரந்ததர நியமனங்களை பெற்றுத்தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், கடந்த சில மாதங்களாக கிழக்கு மாகாண சபையும் ஆளுநரும் தங்களை ஏமாற்றி வந்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

நிரந்தர நியமனம் தொடர்பிலான தீர்க்கமான முடிவுகள் பெறப்படும்வரை தாம் இப்போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என ஆசிரியர்கள் மேலும் தெரிவித்தனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg