Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணு ஒப்பந்தத்திலிருந்து அமெ. விலகினால் போர் மூளும்: மக்ரோன் எச்சரிக்கை

In
Updated: 07:02 GMT, May 5, 2018 | Published: 07:02 GMT, May 5, 2018 |
0 Comments
1539
This post was written by : Suganthini

ஈரானின் அணுசக்தித்திட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகும் பட்சத்தில் போர் மூளும் அபாயம்  காணப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.

Der Spiegel எனும் சஞ்சிகைக்கு அண்மையில் வழங்கிய செவ்வியின்போது, அவர் இவ்வாறு எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஈரானின் அணுசக்தித்திட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகினால் அது போருக்கு வழிவகுக்கும்’ என்றார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போரை விரும்புவாரென்று தான் நம்பவில்லையெனவும், அவர் கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலை 14ஆம் திகதி ஈரானுக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா, சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையில் அணுசக்தித்திட்ட உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. எனினும், இந்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்த உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், ட்ரம்ப்புடன் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg