Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்டோரியா கண்ணாடி மாளிகை திறந்துவைப்பு

In
Updated: 09:48 GMT, May 5, 2018 | Published: 09:48 GMT, May 5, 2018 |
0 Comments
1083
This post was written by : Suganthini

லண்டனிலுள்ள உலகின் மிகப்பெரிய விக்டோரியா கண்ணாடி மாளிகையென அழைக்கப்படும் கியூ தாவரவியல் பூங்கா சுமார் 5 வருடங்களின் பின்னர் புதுப்பொலிவுடன் மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்பூங்காவை இன்று (சனிக்கிழமை) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றது.

லண்டனின் கியூ பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் 1840ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இப்பூங்காவில் பல்வேறு அரியவகைத் தாவரங்கள் உள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளையும் இப்பூங்கா வெகுவாகக் கவர்ந்து வந்தது.

பல்லாண்டுகால பயன்பாட்டிலுள்ள இப்பூங்கா மிகவும் சேதமடைந்த நிலையில், 5 வருடங்களாக புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், பல புதிய வகைத் தாவரங்களுடன் இப்பூங்கா திறக்கப்பட்டது.

இப்பூங்காவை புனரமைப்பதற்காக 41 மில்லியன் பவுண்ட்ஸ் செலவானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உலக பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக இப்பூங்காவை கடந்த 2003ஆம் ஆண்டு யுனெஸ்கோ அங்கிரித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg