Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட பெண்!: திருகோணமலையில் சம்பவம்

In
Updated: 10:53 GMT, May 5, 2018 | Published: 10:53 GMT, May 5, 2018 |
0 Comments
1160
This post was written by : Litharsan

திருகோணமலை – பாலையூற்றுப் பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 26 வயதுடைய பெண்ணொருவர் கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தரிக்கோலால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் குறித்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பெண்ணின் கணவர் தகராறு காரணமாக கத்தரிக்கோலால் குறித்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் வீதி ரோந்துப் பணியில் ஈடுபட்ட பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைதுசெய்ததோடு அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg