Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ் மக்களுக்குக் காணியில்லா அவலம்!

In இலங்கை
Updated: 15:34 GMT, May 5, 2018 | Published: 14:49 GMT, May 5, 2018 |
0 Comments
1130
This post was written by : Litharsan

பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எமது மக்கள் காணியில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்தார்.

இன்று (சனிக்கிழமை) வவுனியா, தரணிக்குளத்தில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது மக்களுக்கு காணி இல்லை. ஆனால் வேறு மாகாணங்களில் இருந்து குடியேற்றுகின்ற திட்டங்கள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மணலாறு போன்ற இடங்களில் தொடர்ச்சியாக பெரும்பான்மை இன மக்களைக் குடியேற்றும் செயற்பாடுகளைக் காணக்கூடியதாகவுள்ளன.

அத்துடன் கொக்கிளாய் பிரதேசத்தில் தமிழ் மக்களுடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மக்களைக் குடியேறவிடாமல் பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் யுத்ததிற்கு முன்பு பாவித்த பல குளங்களையும் காணிகளையும் அங்கு குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின குடியேற்றவாசிகளிற்கு கையளிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் எங்கள் இடங்களில் வனவளப் பிரச்சனை இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றங்கள் நடைபெறும் மணலாற்றில் அப்பிரச்சனை இல்லை என்பது ஒரு பக்கசார்பான நிலைமையாகும். நாங்கள் சரியான அரசியல் ரீதியாக அணுக வேண்டிய தேவை இருந்தாலும் எந்த அரசு வந்தாலும் இதைதான் செய்துகொண்டு இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg