Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய அரச குடும்பம்: புதிய வாரிசின் புகைப்படங்கள் வெளியீடு

In
Updated: 04:29 GMT, May 6, 2018 | Published: 04:29 GMT, May 6, 2018 |
0 Comments
1310
This post was written by : Suganthini

பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் லூயிஸ் ஆர்தரின் 2 புகைப்படங்களை பிரித்தானிய அரச குடும்பம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் -கேட் மிடில்ட்டன் தம்பதியினரின் மூன்றாவது குழந்தையும், பிரித்தானிய அரச குடும்பத்தின் 5ஆவது தலைமுறை வாரிசுமான லூயில் ஆர்தர் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி பிறந்தார். இந்நிலையில், கென்சிங்டன் அரண்மனையில் எடுக்கப்பட்ட இளவரசர் லூயிஸின் இருவேறு புகைப்படங்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.

இளவரசர் லூயிஸ் தனியாகத் தோன்றும் புகைப்படமும் அவரது மூத்த சகோதரியான சார்லோட்டுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இளவரசர் லூயிஸ் தனியாகத் தோன்றும் புகைப்படம், அவர் பிறந்து 3 நாட்களில் ஏப்ரல் 26ஆம் திகதி எடுக்கப்பட்டது. இதேவேளை மற்றைய புகைப்படம், லூயிஸின்  மூத்த சகோதரியான சார்லோட்டின் 3ஆவது பிறந்ததினத்தின்போது எடுக்கப்பட்டது. இப்புகைப்படமானது, தனது இளைய சகோதரர் லூயிஸை, அவரது மூத்த சகோதரி சார்லோட் அரவணைத்து முத்தமிடும் காட்சியுடன் வெளியாகியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் லூயிஸின் சிறியதந்தையான இளவரசர் ஹரி -மேகன் மாக்கிலின் திருமண வைபவத்தில், லூயிஸ் கலந்துகொள்ளமாட்டாரென, கென்சிங்டன் அரண்மனை கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg