Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் திறந்துவைக்கப்பட்ட சிலை: சீனாவின் நன்கொடை

In
Updated: 06:26 GMT, May 6, 2018 | Published: 06:26 GMT, May 6, 2018 |
0 Comments
1159
This post was written by : Johnson paiva

கார்ல்மார்க்சின் பிறப்பிடமான ஜேர்மனியின் ட்ரியர் என்ற இடத்தில் அவரது சிலையொன்று நிறுவப்பட்டு திறந்துவைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜேர்மனி, ட்ரியரில் நேற்று (சனிக்கிழமை) கார்ல்மார்க்சின் 200ஆவது பிறந்ததினத்தின் நினைவாக இந்நிகழ்வு இடம்பெற்ற நிலையில் அங்கு திறந்து வைக்கப்பட்ட காரல்மார்க்ஸ் சிலையானது சீனாவினால் ஜேர்மனிக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட சிலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ல்மார்க்சின் கொள்கைகள் சீனாவில் மிகுந்த செல்வாக்கு மிக்கவை எனவும் அவரது சிறப்புக்கள் குறித்தும் அந்நாட்டு மாநிலங்களவைத் துணை இயக்குனர் Guo Weimin பேசினார். சிலை திறந்து வைக்கப்படுவதற்கு முன்பு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் திறந்து வைக்கப்பட்ட சிலையானது 2.3 டன் எடையிலான வெண்கலத்தினால் செய்யப்பட்டதெனவும் நடுத்தர வயதில் இருந்த அவரது தோற்றமும், அவருக்கே உரித்தான தாடியும், இடது கையில் புத்தகமொன்றினை கொண்டு நடந்து வருவதும் போன்ற அமைப்பில் காணப்பட்ட நிலையில் அந்தச் சிலையின் உயரம் கிட்டத்தட்ட 5.5 அடி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jewish lawyer இன் மகனான கார்ல்ஸ் 17 வருடங்களாக தெற்கு ஜேர்மனியின் ட்ரியர் பகுதியில் வாழ்ந்தவர். இந்நிலையில் அவரது உருவச்சிலை அவர் வாழ்ந்த வீட்டிற்கு முன்பாக நிறுவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg