Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அலிபாபாவின் வருமானம் 58 வீதமாக உயர்ந்தது

In வணிகம்
Updated: 11:25 GMT, May 6, 2018 | Published: 11:24 GMT, May 6, 2018 |
0 Comments
1045
This post was written by : Johnson paiva

சீனாவின் மிகப்பெரிய இலத்திரனியல் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் வருமானம் கடந்த நிதியாண்டு 58% ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் அலிபாபா இலத்திரனியல் வர்த்தக நிறுவனத்தின் 2018 மார்ச்சில் முடிவடைந்த நிதியாண்டு வருமானம் 58 வீதமாக உயர்ந்துள்ளதெனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 58% என்பது ஒவ்வொரு ஆண்டிற்கும் 250.3 பில்லியன் யுவன் (அதாவது 39.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) வருமானம் உயர்வடைந்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையின் நிதிநிலவரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அதிவேக வளர்ச்சிக்கு சீனாவின் வர்த்தக சில்லறை வணிகங்களும் கணினிமயப்படுத்தப்பட்ட (cloud computing) வணிகங்களும் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட வணிகங்களின் ஒருங்கிணைப்புமே முக்கியகாரணங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நிறுவனம் தனது நான்காவது காலாண்டின் நிதிவருமானத்தினையும் வெளியிட்டுள்ளது (அதாவது 2018 ஜனவரி முதல் 2018 மார்ச் வரை) அதன்படி நிதிவருமானம் 61% 61.9 பில்லியன் யுவன் (9.73 பில்லியன் யூரோ டொலர்கள்). பங்குடைமையான இலத்திரனியல் வணிகமொன்று (51.29 பில்லியன் யுவன்) இவ்வருமான வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg