Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரியின் தலைமையில் மே தினக் கூட்டம்: களைகட்டும் மட்டக்களப்பு

In இலங்கை
Updated: 13:02 GMT, May 6, 2018 | Published: 13:02 GMT, May 6, 2018 |
0 Comments
1297
This post was written by : Litharsan

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடிவேம்பு கிராமத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் மேதினக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குபற்றவுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்திற்கு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்து வரும் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்களை அழைத்து வருவதற்காக சுமார் 1500 பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் தேசியக் கட்சியொன்று தனது மே தினக் கூட்டத்தை ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் நடாத்துவது இதுவே முதற்தடவையாகும். இது மட்டக்களப்பு மாவட்டத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவே கருதுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg