Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை: தயார் நிலையில் சீனா

In
Updated: 06:29 GMT, May 7, 2018 | Published: 05:32 GMT, May 7, 2018 |
0 Comments
1209
This post was written by : Johnson paiva

மத்திய கிழக்கில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அதற்கு உதவ சீனா தயாராக உள்ளது எனவும் சீனாவின் மத்தியகிழக்கு விவகார சிறப்புத் தூதுவர் Gong Xiaosheng தெரிவித்துள்ளார்.

மத்தியகிழக்கில் காணப்படும் நிலைமைகள் குறித்து ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்த சிறப்புத்தூதுவர் மத்தியகிழக்கில் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்த சீனா தயாராகவுள்ளதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய நாட்டின் தலைநகரான ரியாத்தில், சவுதிஅரேபியாவின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான வெளிவிவகார அமைச்சின் பிரதித் துணைத் தலைவரான Jamal Aqeel இனை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தபோதே அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச்சந்திப்பினைத் தொடர்ந்து அங்குள்ள ஊடகமொன்றிற்குப் பேட்டியளிக்கும்போது மத்திய கிழக்கில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவர் விரிவாகப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர் பேசுகையில், சிரிய உள்நாட்டுப் போர், பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேயலருக்கும் இடையேயான மோதல்கள், யேமனில் நடந்த யுத்தம் மற்றும் ஈரானிய அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை பாரிய அச்சுறுத்தலாக இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் பேசுகையில் மத்தியகிழக்கு நாடுகளின் நட்பு நாடாக சீனா விளங்குவதாகவும் மத்தியகிழக்கு நாட்டுத் தலைவர்கள் நல்லதொரு அமைதிப் பேச்சுவார்த்தையினை நடத்துவதன் எல்லா முரண்பாடுகளையும் தீர்க்கமுடியும் எனவும் அதற்கு சீனா உதவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg