Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் தேயிலை – ஆடை உற்பத்தி ஏற்றுமதியில் முன்னேற்றம்

In வணிகம்
Updated: 09:00 GMT, May 7, 2018 | Published: 09:00 GMT, May 7, 2018 |
0 Comments
1025
This post was written by : Jeyachandran Vithushan

கடந்த 2017 ஆம் ஆண்டினை விட இலங்கையில் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையில் தலைவர் லூசில்லி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் முழுவதும் இதேபோன்ற முன்னேற்றத்தை தேயிலை உற்பத்தியாளர்கள் பெறுவர் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் பிரகாரம் இந்த ஆண்டியின் மே மாதம் வரையிலான காலப்பகுதியில், ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் 10 சதவீதத்தாலும் உற்பத்தி மூலம் 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமன்றி, இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியினுள் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி சந்தை சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது.

வருடத்தின் ஏனைய காலப்பகுதியினுள்ளும் இதேபோன்ற பெறுபேறுகளை எதிர்ப்பார்க்கலாம் என தைக்கப்பட்ட ஆடைகள் சங்கத்தின் செயலாளர் ரூளி குறே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg