Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எகிப்து மன்னர் துட்டகெமுன்னின் தேர் இடமாற்றப்பட்டது

In உலகம்
Updated: 10:06 GMT, May 7, 2018 | Published: 10:06 GMT, May 7, 2018 |
0 Comments
1257
This post was written by : Johnson paiva

எகிப்து ஆட்சியின் கடைசி மன்னரான துட்டகெமுன்னின் இராணுவத் தேர் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எகிப்து கெய்ரோவில் உள்ள இராணுவ அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வரப்பட்ட எகிப்து ஆட்சியின் கடைசி மன்னரான துட்டகெமுன்னின் இராணுவத் தேரானது கடந்த சனிக்கிழமை அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்நிலையில் அத்தேரானது கிசாவிலுள்ள பிரமிட் வளாகத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய எகிப்திய அருங்காட்சியகத்தில் (Grand Egyptian Museum) வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க 6 தேர்கள் Luxor அருங்காட்சியகம் மற்றும் Tahrir சதுக்கத்தில் அமைந்துள்ள Egyptian அருங்காட்சியகம் உட்பட எகிப்து முழுவதுமாகவுள்ள அருங்காட்சியகங்களில் இருந்து இடமாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தவருட இறுதியில் புதிதாகத் திறந்து வைக்கப்படவுள்ள புதிய எகிப்திய அருங்காட்சியகத்தில் (Grand Egyptian Museum) இந்தத் தேர்கள் இடம்மாற்றி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த இடமாற்றப்பட்ட தேரானது எகிப்திய கடைசி மன்னரான துட்டகெமுன்னின் ஆறாவது தேர் எனவும் இது எகிப்திய நிபுணர் Howard Carte என்பவரால் 1922 இல் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் GEM இன் இயக்குனரான Tarek Tawfik கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் புதிதாகத் திறக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தில் எகிப்திய மன்னரான துட்டகெமுன்னின் 5000க்கும் மேற்பட்ட உடமைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாவும் அங்குள்ள பாதுகாப்பான பண்டைய போக்குவரத்துச் சாதனங்களைப் பார்த்து எகிப்திய இளைய சமூகத்தினர் பலதரப்பட்ட அனுபவங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் “துட்டகெமுன்னின் 5,398 உடமைகளில் 4,700 உடமைகள் ஏற்கனவே இடம் மாற்றப்பட்டுள்ளது, Luxor அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடமைகளில் 122 உடமைகளை இடம்மாற்றியுள்ளோம்,” எனத் தொல்பொருள் உயர்கவுன்சிலின் தலைவர் முஸ்டாபா விசிரி கூறியுள்ளார்.

மேலும் எகிப்திய தொல்பொருள் ஆய்வாளரான கலீட் அனானி கூறுகையில், 43,000 க்கும் அதிகமான எகிப்திய தொல்பொருட்கள் ஏற்கனவே புதிய அருங்காட்சியகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளன, அவற்றில் மிகவும் பிரபலமான மன்னர் இரண்டாம் ராம்சஸின் சிலை உள்ளது எனத்தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க எகிப்திய ஆட்சியின் கடைசி மன்னரான துட்டகெமுன் 19 வயதிலில் இறந்துவிட்டாலும் சிறப்புமிக்க ஆட்சியாளர் எனப்போற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)