Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான மூலதனம் : இலங்கைக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்

In வணிகம்
Updated: 17:27 GMT, May 7, 2018 | Published: 15:34 GMT, May 7, 2018 |
0 Comments
1053
This post was written by : Jeyachandran Vithushan

ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சந்தை மூலதனத்தைக் கொண்ட நிறுவனம் என்ற சாதனையை Mahindra மற்றும் Mahindra Ltd ஆகியன இணைந்து பெற்றமையால் இலங்கையில் மோட்டார் தொழிற்துறைக்கு எண்ணற்ற வரப்பிரசாதங்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மும்பைப் பங்குப் பரிவர்த்னை நிலையத்தில் Mahindra & Mahindra Ltd நிலைநாட்டிய இந்தச் சாதனையைத் தொடர்ந்து, Mahindra நிறுவனம் மிகவிரைவில் தனது பாரிய மோட்டர் பொருத்தும் நிறுவன அலகொன்றை (Automotive Assembly Plant) ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட கூட்டுபங்காண்மையின் விளைவாக இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது என ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவுனரும் பணிப்பாளருமான நலின் வெல்கம தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மஹேந்திர நிறுவனங்கள் கூட்டிணைந்து இந்தியாவில் படைத்த இந்த பாரிய சாதனையால் இலங்கை அநேக அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளது. மேலும் மஹிந்ரா நிறுவனமானது இலங்கையில் மோட்டார் தொழிற்து உத்வேகத்துடன் செல்வதற்கு வலுப்படுத்தி மோட்டார் தொழிற்துறை ஜாம்பவான்கள் இங்கு மோட்டார் தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு வழிவகை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில், முக்கியமாக சந்தைமூலதனத்தின் அடிப்படையில் பார்க்கும்போது Mahindra & Mahindra Ltd ஆனது TaTa Motors ஐ விட அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டதாக விளங்குகின்றது. அத்துடன் மிகவும் அதிகப்படியான பங்குகளால் Mahindra & Mahindra Ltd ஆனது மும்பை பி.எஸ்.இ சென்செக்ஸ் பங்கு விலைச்சுட்டியின் பிரகாரம் கூடிய சந்தைப் பங்கு பெறுமதியைக் கொண்ட ஆறு சிறந்த நிறுவனங்களுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பங்கு விலைச்சுட்டெண்ணின் பெறுமதியை செவ்வாய்க்கிழமை உயர்த்துவதற்குத் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பாரிய பங்காளிகளுள் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

அதுமட்டுமன்றி சந்தை மூலதனப் பெறுமதியின் அடிப்படையில் Mahindra & Mahindra Ltd ஆனது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மோட்டார் உருவாக்குனராக திகழ்கிறது. அது மாருதி சுசுகி நிறுவனத்திற்கு இரண்டாவதாக காணப்பட்டதாக தொழிற்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Mahindra & Mahindra Ltd ஐத் தவிர இந்த ஒரு லட்சம் கோடி பெறுமதியான சந்தை மூலதனம் என்ற பெயரை அண்மையில் (2017) பெற்ற நிறுவனங்களாக Ind Bank, Bajaj Finance மற்றும் Asian paints ஆகியனவே காணப்படுகின்றன.

எம்முடனான இந்த கூட்டுமுயற்சியில் மஹிந்திரா 35 வீதமான பங்குகளையும் ஐடியல் மோட்டார்ஸ் 65 வீதமான பங்குகளையும் கொண்டுள்ளது.

ஐடியல் மோட்டர்ஸ் ஆனது கடந்த ஒன்பது வருடங்களாக Mahindra வின் நம்பகத்தன்மை மிகுந்த விநியோகத்தராக இருந்து வந்துள்ளதுடன் இந்தக் கூட்டுமுயற்சி மஹிந்ரா நிறுவனம் இலங்கையில் கால்பதிப்பதற்கு வழிவகை செய்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட காலப்பகுதில் மஹிந்திரா குழுமத்தின் நிபுணர்களால் உலகளாவிய தொழில்நுட்பத்துக்கேற்றவாறு குறித்த தொழிற்சாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். Mahindraவின் முக்கிய மூன்று ஏற்றுமதி சந்தைகளில் இலங்கையும் ஒன்றாகும்.

Mahindra வின் நிபுணத்துவம் வாய்ந்த குழு மனித மூலதன விருத்தி நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபடாது இலங்கையின் ஏனைய உள்ளூர் மோட்டார் தொழிற்துறையாளர்கள் சர்வதேச தர நியமங்களுக்கமைவாக தமது உற்பத்திகளை முன்னெடுப்பதற்கும் உதவும்.

Mahindra வின் இந்த முயற்சி இலங்கையிலுள்ள மோட்டர் தொழிற்துறைக்கு ஒரு பெரும்வரப்பிரசாதம் என்பதுடன் ‘இலங்கையில் தயாரிக்கப்பட்ட’ என்ற பெயருக்கு பெறுமதி சேர்ப்பதுடன் இலங்கையின் தேசிய உற்பத்தி வளர்ச்சிக்கு எண்ணற்ற வாய்ப்புக்களையும் இது ஏற்படுத்தித் தரும்.

M&M இன் இந்த சாதனை எம்முடைய இந்த நிறுவனங்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்வதற்கான புதிய அத்திவாரத்தை ஏற்படுத்தி வானம் மாத்திரமே எனது வரையறை என்ற சிந்தனைக்குள் எம்மைக் கொண்டுசென்றுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg