Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெங்காய உற்பத்தித்துறையில் தொழில்நுட்ப பயிற்சிகள்!

In இலங்கை
Updated: 15:58 GMT, May 7, 2018 | Published: 15:58 GMT, May 7, 2018 |
0 Comments
1179
This post was written by : Vithushagan

அனுராதபுரம் மாவட்டத்தில் கலன்பிந்துனுவௌ, கல்நேவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 3 விவசாயிகளுக்கு வெங்காய உற்பத்தித்துறையில் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சியை இலங்கையில் செயற்பட்டு வரும் சர்வதேச விவசாயிகள் தொடர்பான கொரிய நாட்டு நிறுவனமான ‘கோபியா’ என்ற அமைப்பு  வழங்கியுள்ளது.

கொரிய நாட்டு தொழில்நுட்ப முறைகளை உள்ளுர் வெங்காய உற்பத்தியாளர்களிடையே அறிமுகம் செய்து, உள்ளுர் வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த கிராம மக்களுக்கு தங்களது பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை இந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சொய்யும் லீக் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg