Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரச்சினைகளை உலகறியச் செய்யும் வாய்ப்பு நழுவிவிட்டது: மஹிந்த

In இலங்கை
Updated: 02:05 GMT, May 8, 2018 | Published: 02:05 GMT, May 8, 2018 |
0 Comments
1143
This post was written by : Jeyachandran Vithushan

தொழிலாளர் தினத்தை மே 7ஆம் திகதிக்கு மாற்றியமைத்ததால், இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினையை உலகிற்கு எடுத்துக்கூறும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி சமனல மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மஹிந்த, “உலக நாடுகள் ஒரே தினத்தில் கூடி தொழிலாளர் உரிமைகளுக்காய் குரல்கொடுக்கும் தினம் இலங்கையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை விட்டு பிரிந்து தனித்து இத்தினத்தை கொண்டாடியதால் என்ன பயன்? உலக நாடுகளுக்கு எமது பிரச்சினையை கூறமுடியாமல் போய்விட்டது.

நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் சிறந்த தீர்மானங்களை எடுப்பதற்கு மைத்திரி அரசாங்கம் அஞ்சுகிறது. ஆனால், இவ்வாறு உலகலாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினங்களை மாற்றுவதற்கும், எமது தரப்பினரை சிறையிலடைக்கவும் அஞ்சுவதில்லை.

மேலும், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு தான் ஓய்வு பெறப்போவதில்லை என மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவு, சுதந்திர கட்சியில் இணைந்திருப்பவர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு இட்டுச்செல்லும்.

அதேபோன்று, இன்று நாட்டில் வரிச்சுமை அதிகரித்து மக்கள் தமது வாழ்க்கையை கொண்டுநடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றியமைக்க இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்போம்” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg