Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்: ஆறாண்டுகளின் பின் திறக்கப்படவுள்ள வீதி!

In உலகம்
Updated: 04:25 GMT, May 8, 2018 | Published: 04:25 GMT, May 8, 2018 |
0 Comments
1168
This post was written by : Risha

உள்நாட்டு போரினால் பேரழிவை எதிர்நோக்கிவந்த சிரியாவின் ஹோம்ஸ் மற்றும் ஹமா பகுதிகளை முற்றுகையிட்டிருந்த கிளர்ச்சியாளர்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

ரஷ்ய ஆதரவிலான சிரிய அரசாங்கத்துடனான உடன்பாட்டை தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் நேற்று (திங்கட்கிழமை) முதல் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, ஹோம்ஸ் மற்றும் ஹமாவிற்கு இடையிலான கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்குட்பட்ட பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள், தங்களது குடும்பத்தாருடன் பேருந்து மூலம் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

நீண்டகாலமாக கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்குட்பட்டிருந்த நிலையில், அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதியாக இப்பகுதி விளங்குகிறது.

கிளர்ச்சியாளர்களின வெளியேற்ற செயல்முறைகள் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வெளியேற்ற செயல்முறை நிறைவடைந்தவுடன், கடந்த ஆறு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த குறித்த இரு மாகாணங்களுக்கு இடையிலான பாதை திறக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்த அரச படை இராணுவ அதிகாரியொருவர் கூறுகையில், ”ஹோம்ஸ், ஹமா மற்றும் அலெப்போ நகரங்களை இணைக்கும் வீதிகள் திறக்கப்படவுள்ளன. அதன்படி சர்வதேச அமைப்புகள், பிராந்தியத்திற்குள் பிரவேசித்து தங்களது வேலையை ஆரம்பிக்க முடிவதுடன், உள்ளூர் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)