Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரணிலை பாதுகாப்பது அரசியல் யாப்பா?

In இலங்கை
Updated: 07:49 GMT, May 8, 2018 | Published: 07:49 GMT, May 8, 2018 |
0 Comments
1243
This post was written by : Varshini

அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரங்களினாலேயே பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க நீடிப்பதாக பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

19ஆம் திருத்தச் சட்டம் காரணமாகவே ஜனாதிபதியால் பிரதமரை பதவி நீக்க முடியவில்லை என்றும், நாடாளுமன்றத்தையும் கலைக்க முடியாமல் உள்ளதென்றும் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை தமக்கு ஏற்ற வகையில் பிரதமர் ரணில் மாற்றியமைத்துக்கொண்டதாகவும், அந்த சட்ட திட்டங்களே நாட்டிலும் செயற்படுத்தப்படுகின்றதென்றும் அவர் குறிப்பிட்டார்.

2020இல் தனியாட்சி அமைப்பதாக குறிப்பிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது என்றும், வெலிக்கடைச் சிறைச்சாலையிலேயே 2020இல் ஐ.தே.க. ஆட்சியமைக்கும் என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.

இதேவேளை, இன்னுமொரு தடவை தோற்பதற்காக ஆட்சியமைக்க மாட்டோம் என்றும் 2050இலும் மஹிந்த அணியின் ஆட்சியே தொடரும் என்றும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg