Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாத அச்சுறுத்தல்: விமான நிலைய பாதுகாப்பிற்கு 200 மில்லியன்!

In
Updated: 03:51 GMT, May 9, 2018 | Published: 03:51 GMT, May 9, 2018 |
0 Comments
1256
This post was written by : Risha

விமான நிலைய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் வருடாந்த வரவு-செலவு திட்டத்தில் 224 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் அதிகரித்துவரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையிலேயே, விமான நிலைய பாதுகாப்பிற்கென இப்பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்ரேலியாவின் 19 சர்வதேச விமான நிலையங்களிலும், எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்துவதற்காக மேலும் 5.2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடான அவுஸ்ரேலியா, கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. இதேவேளை, பல திட்டமிடப்பட்ட உள்ளூர் பயங்கரவாதத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டும் உள்ளன.

அவற்றில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் சிட்னி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானமொன்றிற்குள் வெடிகுண்டு சாதனங்களை கொண்டு செல்வதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)