Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு- கிழக்கு பகுதிகளிலும் இறப்பர் உற்பத்தி!

In வணிகம்
Updated: 13:04 GMT, May 9, 2018 | Published: 13:04 GMT, May 9, 2018 |
0 Comments
1063
This post was written by : Vithushagan

மலையகத்தை போன்று வடக்கு கிழக்கிலும் இறப்பர் செய்கையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் ஆலோசகர் லக்ன பரனவிதான தெரிவித்துள்ளார்.

சிறு தோட்ட இறப்பர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கு கூடுதலான விலையை பெற்றுக் கொள்வதற்கு தற்போது நவீன தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்கு உதவுவதற்கு நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று பெருந்தோட்ட அமைச்சின் ஆலோசகர் தெரிவித்தார். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் இறப்பர் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவின் தெற்கு பிரதேசத்தில் 25 ஏக்கரில் தற்போது இறப்பர் செய்கை சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் இறப்பர் உற்பத்தியை மேற்கொண்ட ஒருவர் அந்த முயற்சியில் தோல்வி கண்டுள்ளதாக எமது செய்திப்பிரிவு ஆலோசகரிடம் சுட்டிக்காட்டியது.

இதற்கு பதிலளித்த அவர், இந்த முயற்சியில் தோல்வியடைய என்ன காரணம் என்பதை குறிப்பிட்டு அதற்கான விளக்களை பெற்றுக் கொள்ள முடியும். 0718427076 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இறப்பர் ஆய்வு பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு இதற்கான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறப்பர் உற்பத்தி தொடர்பாக அவர் எமது செய்தி பிரிவிற்கு விளக்கமளிக்கையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

ஆசிய பிராந்தியத்தில் இலங்கை முக்கிய கேந்திர நிலையமாக வளர்ச்சி பெறும் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன. ஏதிர் காலத்தில் இலங்கை இறப்பர் உற்பத்தியில் கேந்திர நிலையமாக திகழும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தினால் சிறு தோட்ட இறப்பர் உற்பத்திக்காக வழங்கப்படும் நிவாரண உதவி வடக்கு கிழக்கு இறப்பர் பயிர் உற்பத்திக்காக வழங்கப்படும் என்று கூறினார்.இத்தொழிற்துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தி இலாபகரமாக முன்னெடுப்பதிலும் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தியுள்ளது.

ஆசியாவில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டே இம்முறை உலக இறப்பர் ஆராய்ச்சி மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது என்று பெருந்தோட்ட அமைச்சு ஆலோசகர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg