Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிண்ணத்தைக் கைப்பற்றியது வவுனியா இந்துக்கல்லூரி

In
Updated: 14:23 GMT, May 9, 2018 | Published: 14:23 GMT, May 9, 2018 |
0 Comments
1050
This post was written by : Litharsan

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வவுனியா இந்துக்கல்லூரி பெண்கள் அணியும் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி பெண்கள் அணியும் மோதின. அதில் வவுனியா இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்றது.

முதல் இன்னிங்ஸில் மன்னார் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சித்தி விநாயகர் சார்பாக முகமட் ஜல்லா 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் வவுனியா இந்துக்கல்லூரியின் தினோசிகா 8 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த வவுனியா இந்துக்கல்லூரி அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது. அதனை தொடர்ந்து 27 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய சித்தி விநாயகர் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 112 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டி நிறைவுக்கு வந்தது. குறித்த போட்டி சமநிலையில் முடிவடைந்தாலும் முதல் இன்னிங்ஸில் சித்திவிநாயகர் அணியை விட அதிக ஓட்டங்களைக் குவித்த வவுனியா இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)