Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்

In
Updated: 04:38 GMT, May 10, 2018 | Published: 04:30 GMT, May 10, 2018 |
0 Comments
1122
This post was written by : Kemasiya

யாழ்ப்பாணம் – இணுவில் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், நேற்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பகல் 12.00 மணிக்கு கொடியேற்ற வைபவம் இடம்பெற்றுள்ளதோடு. மாலை வேளை உற்சவத்தின் போது பிள்ளையார் குதிரை வாகனத்தில் வீதி உலாவந்தார். தொடர்ந்தும் இன்று (வியாழக்கிழமை) 2ஆம் நாள் திருவிழா இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் 10 நாட்கள் இம்மகோற்சவம் இடம்பெறவுள்ளதுடன். 11 ஆம் நாள் திருக்கல்யாணமும் 12 ஆம் நாள் பிரயாசித்த அபிஷேகமும் 13 ஆம் நாள் வைரவர் மடையும் இடம்பெற்று இம் மாதம் 22 ஆம் திகதியுடன் ஸ்ரீ பரராஜ சேகரப் பிள்ளையாரின் மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது.

ஆலயங்களால் சூழப்பெற்று பல வரலாற்று பெருமையை கொண்ட இணுவில் நகரில் அமைந்துள்ள இவ் ஆலயமானது ஆறு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

கிட்டத்தட்ட 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளால் ஸ்ரீ பரராஜ சேகரப் பிள்ளையார் ஆலயம் கட்டப்பட்டதாகவும், இது பரராஜசேகர மன்னனால் கட்டப்பட்டது என்பதால் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் என்னும் பெயர் சூட்டப்பட்டது எனவும் ஆலய வரலாறு கூறுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)