Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரியின் தத்ரூபமான திருமண நிகழ்வு: ரசிகர்கள் கொண்டாட்டம்

In
Updated: 05:37 GMT, May 10, 2018 | Published: 05:37 GMT, May 10, 2018 |
0 Comments
1312
This post was written by : Suganthini

பிரித்தானிய அரச குடும்பத்தில் நடைபெறவுள்ள மிகப் பிரமாண்டமான திருமண நிகழ்வைக் கொண்டாடும் வகையில், வின்ஸ்டர் கோட்டையிலுள்ள Legoland பூங்கா புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தின் ஆறாவது வாரிசான இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மாக்கிலுக்கும், எதிர்வரும் 19ஆம் திகதி வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இளவரசர் ஹரி –மாக்கிலின் திருமண ஏற்பாடுகளில் அரச குடும்பத்தினர் மாத்திரமின்றி, அவர்களின் திருமணத்தைக் கௌரவிக்கும் வகையில் அரச குடும்ப ரசிகர்களும் தம்மாலான பங்களிப்புகளைச் செய்துவருகின்றனர்.

அந்த வகையில், இளவரசர் ஹரி –மேகன் மாக்கிலின் தத்ரூபமான திருமண நிகழ்வைச் சித்தரிக்கும் வகையில், இளவரசர் ஹரி –மேகன் மாக்கில் உட்பட அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களின் உருவப்பொம்மைகளை வைத்து மேற்படி பூங்கா அழகூட்டப்பட்டுள்ளது.

திருமண உடையில் தம்பதியாகத் தோன்றும் இளவரசர் ஹரி –மேகன் மாக்கில், அவர்கள் வின்ஸ்டர் கோட்டையூடாக குதிரை வண்டியில் வலம்வருதல், அவர்களை வாழ்த்துவதற்காகக் கூடியுள்ள சுமார் 500 பார்வையாளர்கள் மற்றும் பிரித்தானியாவின் எலிஸபெத் மகாராணி, இளவரசர் வில்லியம், அவரது பாரியார் கேட் மிடில்ட்டன், அவர்களது பிள்ளைகளான இளவரசர் ஜோர்ஜ், இளவரசி சார்லோட், மாக்கிலின் பெற்றோர் ஆகியோரின் உருவப்பொம்மைகளை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேற்படி பூங்காவின் இந்த ஏற்பாடுகளைச் செய்வதற்காக 11 பேரைக் கொண்ட குழுவொன்று செயற்பட்டதுடன், சுமார் 60 ஆயிரம் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)